வியாழன், 4 நவம்பர், 2010

இலங்கையின் மனித அபிவிருத்தி சுட்டெண் அதிகரிப்பு

நாட்டின் உண்மை சொத்து; மனித அபிவிருத்திக்காக நடந்து செல்லும் பாதை என்னும் தலைப்பில் 20 ஆவது மனித அபிவிருத்திக்கான அறிக்ககையினை உலகளாவிய ரீதியில் இன்றை தினம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பாங் கீ மூனினால் வெளியிடப்படவுள்ளது.

2010 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கையில் உயர் மனித அபிவிருத்தி நாடுகள் பட்டியலில் 38 நாடுகள் இடம்பெற்றுள்ளதுடன் முதல் நான்கு இடங்களில் நோர்வே, அவுஸ்திரேலியா, நியூஸ்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

மத்திய மனித அபிவிருத்தி பட்டியலிலே இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தனோசியா மற்றும் இலங்கை உட்பட 37 நாடுகள் இடம்பெற்றுள்ளது. இவற்றுள் இலங்கை 91 ஆவது இடத்திலும் , இந்தியா,தாய்லாந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தனோசியா ஆகியன முறையே 119, 92, 97 மற்றும் 108 இடங்களில் உள்ளன.

இலங்கையின் மனித அபிவிருத்தி சுட்டெண் 1980 ஆம் ஆண்டு 0.513 இலிருந்து 2010 இல் 0.659 வரை உயர்ந்துள்ளது.