சனி, 3 செப்டம்பர், 2011

20 மாவட்டங்களின் அபிவிருத்தி; 65,889 மில். ரூபா செலவீடு 13101 கிராம சேவகர் பிரிவுகளில்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நாட்டின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த அபிவிருத்திப் பணிகளுக்காக 2011 ஆம் ஆண்டிலே 65,889.8 மில்லியன் ரூபா பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் 13101 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திவிநெகும, சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம், கமநெகும, வீதிகளுக்கு காபட் இடுதல், கெமிதிரிய, யலி புபுதமு, பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், தெற்கு அபிவிருத்தி அதிகார சபை, உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச அபிவிருத்தி அதிகார சபை, உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச அபிவிருத்தி (சிறிய அளவிலான நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளப் பெருக்கு சேதங்கள்), தோட்ட வீதிகளின் அபிவிருத்தி, வெளிநாட்டு உதவிக் கருத்திட்டங்கள் மற்றும் கிழக்கின் உதயம் என்பவற்றிற்காகவே அந்த நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும் 20 மாவட்டங்களைச் சேர்ந்த முன்பள்ளிகளின் அபிவிருத்திக்காக வும், பாடசாலை மலசல கூடங்களை நிர் மாணித்தல், தாய்மார் சிகிச்சை நிலையங்கள், சிறிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் என்பவற்றிற்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவற்றினைவிட கிராமிய வீதிகள், மின்சாரம், குடிநீர் வசதிகள் என்பற்றிற்காகவும் சுமார் 25,249 மில்லியன் ரூபா 2011 ஆம் ஆண்டிக்காக ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சானது தேசிய அபிவிருத்தியைப் போன்றே பிராந்திய அபிவிருத்திக்கும் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.

அதன் கீழ் இலங்கையின் 09 மாகாணங் களிலும் அந்த மாகாணங்களின் தேவைகளை மையமாகக் கொண்டு தனித்தனியான பொருளாதார சமூக மற்றும் கலாசார முக்கியத்துவமிக்க அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. அவையாவன,

ருஹுணு உதானய, சப்ரகமுவ அரு ணாலோக்கய, வயம்ப புபுதுவ, கந்துரட்ட உதானய, புபுதமு வெல்லஸ்ஸ, ரஜரட்ட நவோதய, பட்டஹிர ரன் அருண, வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் என்பனவாகும்.