திங்கள், 5 செப்டம்பர், 2011

அரச பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைப்பத்திரங்கள் திருத்தப்படும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் (05.09.2011) மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணை விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் கடந்த ஜுலை மாதம் 29 ஆம் திகதியும் தமிழ், சிங்கள பாடசாலைகள் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியும் மூடப்பட்டன.

முதலாம் கட்ட பரீட்சை மதிப்பீடுகள் இடம்பெறும் கொழும்பு ரோயல் கல்லூரி, களுத்துறை ஹொலிகுரோஸ் கல்லூரி, கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி பெண்கள் உயர் பாடசாலை, மாத்தறை புனித சில்வஸ்டர் கல்லூரி, பதுளை மத்திய கல்லூரி ஆகியன செப்டம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும்.

இரண்டாம் கட்ட பரீட்சை மதிப்பீடுகளுக்காக பயன்படுத்தப்படும் கொழும்பு டி. எஸ். சேனநாயக்க கல்லூரி, கண்டி பதுயுதீன் மகளிர் கல்லூரி, காலி சவுத்லேண்ட் கல்லூரி, மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் கல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரி பெண்கள் பிரிவு என்பன செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமையும்,

மூன்றாம் கட்ட பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களாக பயன்படுத்தப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பன இன்று 5 ஆம் திகதி ஆரம்பமாகி மீண்டும் இம்மாதம் 19 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மூடப்பட்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் சகல பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மூடப்படும்.