சனி, 27 அக்டோபர், 2012

படகை கடத்திச் சென்ற 14 பேர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீன்பிடி படகை கடத்திய நபர்களுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தங்காலை கடற்பரப்பில் வைத்து மீனவர்களின் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றை கடத்தி அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோர முற்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் சில மீனவர்களை கொலை செய்து படகை கடத்திச் சென்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

படகு கடத்தல் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலியாவிற்கு அறிவித்திருந்தது. இதன்படி படகு மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோர முற்பட்டவர்களை அந்நாட்டு குடிவரவு குடியழகழ்வுத் திணைக்களம் நாடு கடத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மாதம் 13ம் திகதி குறித்த படகு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படகை கடத்திய 14 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. கொகோஸ் தீவுகளிலிருந்து விசேட விமானம் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

படகில் 15 பேர் பயணம் செய்துள்ளதாகவும், 14 பேர் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒருவரை நாடு கடத்த முடியவில்லை எனவும், அவரை விரைவில் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.