திங்கள், 4 ஏப்ரல், 2016

வெளி நாடுகளிள் உள்ள புலிகளின் பின்னனியில் யாழ்.சாவகச்சேரி தற் கொலை அங்கி, கொழும்பு பத்திரிகை செய்தி அதிர்சி தகவல்!

அன்மையில் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை குண்டு அங்கியை வைத்திருந்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப் படுகிறது.
 
இது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என சிங்கள பத்திரிகை யொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான எட்வட் ஜூலியன் புனர்வாழ்வு அளிக்கப்படாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
சந்தேக நபரின் கணக்கிற்கு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பணம் வைப்பிலிட்டுள்ளனர்.
 
மன்னார், திருகோணமலை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர் களுடன் சந்தேக நபர் நெருங்கிய தொடர்புகளைப் பேணியமை தொலைபேசி உரையாடல்களை பிரசீலனை செய்ததன் மூலம் தெரியவந்துள்ளது.
 
மட்டக்களப்பைச் சேர்ந்த தற்போது பிரான்ஸ் குடியுரிமையை பெற்றுக்கொண்ட நபர் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி எட்வட் ஜுலியட் என்பவரின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.
 
இந்தப் பணத்தைக் கொண்டே தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
 
சுதாகரனினால் அனுப்பி வைக்கப்படும் நபருக்கு இந்த அங்கி உள்ளிட்டவற்றை வழங்குமாறு கோரப்பட்டதாக எட்வட் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
 
எட்வட் ஜூலியட்டின் கணக்கிற்கு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஏனைய பலரும் பணம் வைப்பிலிட்டுள்ளனர். பல லட்ச ரூபா பணம் இவ்வாறு வைப்பலிடப்பட்டுள்ளது.
 
இந்த வலையமைப்பின் நோக்கம் எது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
 
புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் மற்றும் முஸ்லிம் இன சமூகம் ஆகியனவற்றை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை இந்த ஆண்டில் நடாத்த திட்டமிட்டிருந்ததாக எட்வட் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார் என சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
நம்பகத் தகுந்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்களை வெளியிடுவதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.