புதன், 6 ஏப்ரல், 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சுமார் 20 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ளது.
 
அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் உடனிருந்துள்ளனர். இதேவேளை, பாதுகாப்புச் சபையின் தீரமானத்திற்கு அமையவே, மஹிந்தராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.