மின்சார சபை அதிகாரிகளின் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் மூலமாக மட்டும் 121 லட்சம் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இத்தொகையானது டிசம்பர் மாதத்தில் மட்டும் பெறப்பட்ட இலாபம் என்பது குறிப்பிடத்தக்கது.
மின் பட்டியல் மாற்றல், சட்டவிரோத மின்சார பாவனை, சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 106 குற்றச்சாட்டுக்கள் மூலமாக இத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்காது இலாபத்தை நோக்கி பயணிப்பதற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெறுபவர்களை இனங்கண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
