சனி, 4 ஜூலை, 2020

வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தியிருந்தால் தற்போது நடைமுறை ரீதியாக சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருக்க முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
யாழ்ப்பாணம், வறணியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும், இலங்கை – இந்திய ஒப்பந்தததின் ஊடாக கிடைத்த மாகாணசபை அதிகாரங்கள் என்பது பொன்னான வாய்ப்பு என்று தெரித்த அமைச்சர், அது தவறானவர்களின் கைகளில் சென்றடைந்தமையினால் சரியாக கையாளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

சனி, 27 ஜூன், 2020

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய விவகாரம்! கருணா வெளியிட்ட முக்கிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கிய பெருந்தொகை ஆயுதங்களையும், பணத்தையும் தாம் வெலிஓயா முகாமில் வைத்து பொறுப்பேற்றதாக கருணா அம்மான் என்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.2005ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பெருந்தொகை பணத்தை வழங்கியது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தகவலை கருணா வெளியிட்டார்.

எவர் தமிழ் இனத்தை அழித்தார்கள் என்று சொல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றுவரை அவர்களுக்கு பின்னால் தான் செம்பு தூக்கிறார்கள்.!

செவ்வாய், 23 ஜூன், 2020

இறக்குமதியை மட்டுப்படுத்தி உற்பத்தியை ஆரம்பியுங்கள் ஜனாதிபதி தொழிலதிபர்களுக்கு பணிப்புரை

நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் மக்கள்மயப்பட்ட பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையை வெற்றிகொள்வது தொழிலதிபர்களுக்குள்ள தற்போதைய சவாலாகுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதன், 17 ஜூன், 2020

11 ஆயிரத்து 145 மில்லியன் இலங்கை ரூபாய் மோசடி செய்து சிங்கப்பூரில் மறைந்துள்ள தமிழனின் இரகசியம் சிக்கியது

இலங்கை மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச போலீஸார் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை ஹர்ஜன் அலெக்சாண்டர் என மாற்றியுள்ளார் என சர்வதேச போலீஸார் தெரிவித்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது.

திங்கள், 15 ஜூன், 2020

கூட்டமைப்பினால் கைவிடப்பட்டவர்களின் வாழ்வியலும் கட்டியெழுப்பப்படும் – மானிப்பாயில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டாட்சியில் போலி வார்த்தைகளினால் ஏமாற்றப்பட்டவர்களுக்கும் அரைகுறை திட்டங்களுடன் கைவிடப்பட்டவர்களுக்கும் கரம் கொடுத்து, சிறந்த வாழ்வியல் அமைத்து கொடுக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மானிப்பாயில் நடைபெற்ற கட்சியின் மானிப்பாய் மற்றும் சங்கானை ஆகிய பிரதேசங்களின் வட்டார செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவரர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

சுமந்திரனால் அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யபட்ட 20 பேருக்கு நேர்ந்த கதி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் இதுவரையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராலும் பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் 91 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

திங்கள், 8 ஜூன், 2020

முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ மாபெரும் விருட்சம்

சிலர் உலகில் பல சாதனைகளை படைப்பர்.ஆனால் அதிலும் ஒரு சிலருக்கே பெயரும் புகழும் கிடைக்கின்றன.அந்தப் புகழும் காலப்போக்கில் மங்கி விடும்.ஆனால் கோடியில் ஒருவருக்கே அந்த மங்காப் புகழும் பெருமையும் வாழும் போதே கிடைக்கின்றன.அந்த அதீத புருஷர் வரிசையில் இலங்கைத் திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ முன்னிலை வகிக்கிறார்.

சனி, 6 ஜூன், 2020

திருமலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கலந்தரையாடல்!

திருகோணமலையில் இன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள் , முன்னணி செயற்பாட்டாளர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் திருகோணமலை உப்புவெளியில் அமைந்துள்ள சவர்கா விருந்தினர் விடுதியில் சுகாதார முறைப்படியும் , சமூக இடைவெளி என்பவற்றை அனுசரித்து இன்றையதினம் நடைபெற்றது.

வெள்ளி, 5 ஜூன், 2020

அரசியல் வெற்றிப் பயணத்தில் அரை நூற்றாண்டைக் கடந்த சாதனை வீரர் பிரதமர் மஹிந்த

சுதந்திர இலங்கையின் மிகச் சிறந்த தனித்துவமிக்க அரசியல் ஆளுமைகளில் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடத்தக்கவராவார். இவரது அரசியல் தலைமைத்துவம் மற்றும் செயற்றிறன்களினால் மக்கள் அளப்பரிய நன்மைகளைப் பெற்றுள்ளனர்.

இந்நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே தேசிய அரசியலில் பிரகாசித்த ராஜபக்ஷ பரம்பரையைச் சேர்ந்தவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது தந்தையைப் போலவே நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்திலும் சுபீட்சத்திலும் அதிக அக்கறையும் கவனமும் செலுத்தி செயற்பட்டு வருகின்றார்.

வியாழன், 4 ஜூன், 2020

நல்லிணக்கம் என்றால் நல்லிணக்கம், கடும்போக்கு என்றால் கடும்போக்கு : இது நானும் பிரபாகரனும் மஹிந்தவிடம் கண்ட அனுபவங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

அரசியலுக்காக நடிக்க விரும்பாத ஒரு அரசியல் தலைவர் மகிந்த ராஜபக்ச. நல்லிணக்கத்துடன் அணுகினால் அவர் நல்லிணக்கம் காட்டுவார். கடும் போக்கில் அணுகினால் கடும்போக்கையே கடைப்பிடிப்பார்.

இது நானும் பிரபாகரனும் அவரிடம் கண்ட அனுபவங்கள் என பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் ஐம்பதாண்டு அரசியல் வாழ்வின் நிறைவு குறித்து கருத்து தெரிவிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதன், 3 ஜூன், 2020

நாட்டின் பாதுகாப்பு, தொல்பொருள் மரபுரிமை; இரு ஜனாதிபதி செயலணிகள்

பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கும், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு ஜனாதிபதி செயலணிகள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் (நேற்று) 2020 ஜூன் மாதம் 02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்கு திறக்க அமைச்சரவை அனுமதி!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கையை ஏற்று வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தை உடனடியாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை கட்டுவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வவுனியா மதகு வைத்தகுளத்தில் 291 மில்லியன் நிதியை ஒதுக்கி அன்றைய அமைச்சரவை அனுமதி அளித்து கட்டப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வடமேல் மாகாண “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வடமேல் மாகாணத்தில் “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த மாகாணத்தில் பல ஆண்டுகளாக இறால் செய்கை பலதரப்பட்டவர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவந்த போதிலும் அவை விஞ்ஞானபூர்வமான பொறிமுறைகளை கொண்டு மேற்கொள்ளப்படாமையால் பெரும் நட்டங்களை செய்கையாளர்கள் சந்திக்க நேரிட்டது.

செவ்வாய், 2 ஜூன், 2020

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

பாராளுமன்றை கலைத்தல் மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

அடிப்படையில் ஒன்றை ஒழித்து வைத்துக்கொண்டு வெளிப்படையில் இன்னொன்றை பேசுவதை போலத்தான் இந்த வழக்கும் தாக்கல் செய்யப்படிருக்கிறது. தேர்தலுக்கு முகம் கொடுக்க சிலர் இன்று தயாரில்லை. இந்த ஆழ்மன அச்சத்தில் இருப்பவர்கள் நீதியின் தீர்ப்பு வேறு விதமாக அமையும் என்று நம்பியிருந்திருக்கிறார்கள். ஆனாலும் நீதிமன்றம் நியாத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது என கடற்றெறாழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 31 மே, 2020

மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத ஆறுமுகன் தொண்டமான்!

இலங்கையை சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளில் முக்கியமானவர் ஆறுமுகன் தொண்டமான். அங்குள்ள தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் வசதிகளையும் பெற்று தந்து அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மேலும் அவருடைய நுவரேலியா தொகுதியில் இதுகூரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும வெற்றி கண்ட சாதனை மன்னன் ஆறுமுகன் தொண்டமான்.

அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

தொழில் நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் சட்ட நடைமுறைகளை அனைவரும் ஏற்று செயற்பட வேண்டும் என்பதுடன் அத்தகைய சட்ட வரையறைகளை மீற எவருக்கும் அனுமதி கிடையாது என்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சனி, 30 மே, 2020

லண்டனில் இருந்து கொண்டு கோடிக்கணக்கில் உலகளாவிய மோசடியில் ஈடுபட்ட 2 தமிழர்கள்! அதிரவைக்கும் பின்னணி தகவல்

பிரித்தானியாவில் 2.4 மில்லியன் பவுண்டுகள் சம்பந்தப்பட்ட உலகளாவிய பணமோசடியில் ஈடுபட்டதற்காக இரண்டு தமிழர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் Purley-வை சேர்ந்த Vijaya Kumar Krishnasamy (32) மற்றும் Chandrasekar Nallayan (44) ஆகிய இரண்டு இந்திய தமிழர்களே குற்றவாளிகள் ஆவார்கள்.இருவரும் சேர்ந்து 2.4 மில்லியன் பவுண்டுகள் சம்பந்தப்பட்ட money laundering எனப்படும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதோடு, £1.6 மில்லியன் பணமோசடியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்துள்ளது.

திங்கள், 25 மே, 2020

வலி கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

அண்மையில் வீசிய கடுங்காற்று காரணமாக கோப்பாய், நீர்வேலி, அச்செழு போன்ற பிரதேசங்களில் சுமார் ஐநூறு ஏக்கர் பிரதேசத்தி்ல் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து அழிவடைந்துள்ளன.

இந்நிலையில் குறித்தபிரதேசத்திற்கான இன்று நேரடியாக சென்ற கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்டுள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான அழிவுகளை நேரடியாக அவதானித்தார்.