திங்கள், 15 ஜூன், 2020

சுமந்திரனால் அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யபட்ட 20 பேருக்கு நேர்ந்த கதி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் இதுவரையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராலும் பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் 91 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


இந்நிலையில் தற்போதுவரையில் மொத்தமாக 106 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 15 முன்னாள் போராளிகள் கைது செய்யபப்ட்டு பயங்கரவாதத்தடைப்பிரிவுப் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ் பத்திரிகை ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது.

மொத்தமாக சிறையிலும் தடுப்புக்காவலிலும் தடுத்தும் அடைத்தும் வைக்கப்பட்டிருக்கும் தண்டனை விதிக்கப்பட்ட, வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் மற்றும் விளக்கமறியல் கைதிகளுமாக 91 அரசியல் கைதிகளாகயிருந்தயிருந்த 91 அரசியல் கைதிகளுடன் கொரோனா காலத்தில் கைது செய்யப்பட்ட சுமந்திரன் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 15 கைதிகளுடன் தற்பொழுது மொத்தமாக 106 பேர் அரசியல் கைதிகளாக அடையாளப்பப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுமந்திரன் மீது தாக்குதல் நடத்த சதியில் ஈடுபட்டதாக 2017 ஆம் ஆண்டு தை மாதம் 13ம் திகதி 5 போராளிகள் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் சேர்த்து மொத்தமாக 20 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் இருவர் கால்கள் மற்றும் கைகள் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.