ஞாயிறு, 31 மே, 2020

மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத ஆறுமுகன் தொண்டமான்!

இலங்கையை சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளில் முக்கியமானவர் ஆறுமுகன் தொண்டமான். அங்குள்ள தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் வசதிகளையும் பெற்று தந்து அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மேலும் அவருடைய நுவரேலியா தொகுதியில் இதுகூரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும வெற்றி கண்ட சாதனை மன்னன் ஆறுமுகன் தொண்டமான்.

மலையக மக்களின் நலன்களுக்காக அவர்களுடைய வளர்ச்சிக்காக கடந்த 30-ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் ஆறுமுகன் தொண்டமான்.

25-ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பொறுப்பேற்று தன் தொகுதி மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுத்தவர்.

2010-ம் ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மலையக பகுதிகளுக்கு அழைத்துச்சென்று, தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்க ஏற்பாடுகளைச் செய்தவர் ஆறுமுகன் தொண்டமான்.

தமிழக அரசியல்வாதிகள் பலருடன் மிகவும் நெருக்கமான நட்பைப் பாதுகாத்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். இதனால் தான் தமிழக அரசியலில் உள்ள முக்கிய தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

இவர் இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மட்டுமின்றி, இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காகப் பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர் என தமிழகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டு இருந்தார்.

இவரின் மறைவுக்கு, இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, , தி.மு.க தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, டி.டி.வி.தினகரன், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், வி.சி.க தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி,தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் என பல முக்கிய தலைவர்கள் தங்களுடைய இரங்கல் செய்தியை பதிவிட்டு இருந்தனர்.

கடந்த 4 நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் ஆறுமுகன் தொண்டமானுக்கு தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்திய நிலையில் இன்று அவருடைய உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளது.