மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு பிரதேசத்தில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றி (31) இரவு 09.15 அளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் அம்மன்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய குமாரபொடி ரவிந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
