இ-மெயிலை நான் கண்டுபிடித்தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான
அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழர் சிவா அய்யா துரை
தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74)
அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும்,
இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி மற்றும் சில தமிழ்
நிறுவனங்களும் புகழாரம் சூட்டி யுள்ளன.
ஆனால் அந்த அங்கீகாரம், கவுரவம்
தனக்குச் சொந்த மானது என்று அமெரிக்காவில் வாழும் தமிழர் சிவா அய்யாதுரை
உரிமை கோரியுள்ளார்.