இராணுவ நீதிமன்றமானது இலங்கையிலுள்ள ஏனைய நீதிமன்றங்களை போன்ற ஒரு நீதிமன்றம் என்பதால் அது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா தொடர்பில் இராணுவ நீதிமன்றில் இடம்பெற்ற நடவடிக்கைகள் குறித்த எழுத்து மூலமான அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்பிக்குமாறு எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்தே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
