இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் அனுசரணையில் புத்தளம் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் இலவச வைத்திய முகாம் ஒன்று நடைபெற்று வருகின்றது. புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில் புத்தளத்தில் நேற்று ஆரம்பமான இந்த இலவச வைத்திய முகாம் எதிர்வரும் சனிக்கிழமை வரை நடைபெறும் என புத்தளம் நகர சபைத் தலைவர் என். எம். நஸ்மி தெரிவித்தார்.
இங்கு இலவசமாக கண் பரிசோதிக்கப்பட்டு மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்படவுள்ளதோடு, சிகிச்சைகளுக்கான மருந்து மாத்திரைகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்திய முகாமில் அமெரிக்க வைத்தியர்கள், தாதியர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
