தமிழ்நாட்டில் வைத்து இலங்கை சுற்றுலாப்பயணிகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், குறித்த தாக்குதலுடன் தமக்குத் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சென்னையில் சிங்களவர்கள் தாக்கப்பட்டமைக்கு மே 17 இயக்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
உலகில் தமிழ்நாடு சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தலான நாடு அல்ல என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போதும்கூட சிங்களவர்கள் இந்தியாவிற்கு வந்து பயமின்றி சுற்றுலா செய்ததாக மே 17 இயக்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
