வடமாகாணத்தில் வைத்தியர்களின் பற்றாக்குறை நீடித்து வருவதால் அதனைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலளர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தள்ளார்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர் வரும் 7ஆம் திகதி முதல் 118 வைத்தியர்கள் வைத்திய சாலைக்கு நியமனம் பெறுகின்றனர் என்று வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்
வடமாகாணத்தில் வைத்தி யர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக பல முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றன. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் சுகாதார அமைச்சுக்கு எம்மால் முன்வைக் கப்பட்டன. அதனடிப்படையில் தற்போது வைத்திய கல்வி நெறியை முடித்து வெளியேறியுள்ள 600 பேரில் 118 பேர் வட மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 72 வைத்தியர்களும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 28 வைத்தியர்களும், முல்லைத் தீவு மாவட்டத்துக்கு 26 வைத் தியர்களும் மன்னார் மாவட்டத் துக்கு 24 வைத்தியர்களும் வவு னியா மாவட்டத்துக்கு 18 வைத் தியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர் என்றார்.
