இந்த வருடம் ஜனவரி 1ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரை நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளினால் 7 கோடி ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தரவாதமற்ற பொருட்களை விற்றல், விலைப்பட்டியலை காட்சிக்கு வைக்காமை, காலாவதியான பொருட்களை விற்றமை, குறிப்பிட்ட விலையை விட பொருட்களை அதிக விலைக்கு விற்றமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக இத்தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் 27,123 தேடுதல் நடவடிக்கைகள் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதுவே வரலாற்றில் அதிக தண்டப்பணம் அறவிடப்பட்ட சந்தர்ப்பம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
