விசேட தேவையுடையோருக்கு கொடுப்பனவு வழங்க சமூக சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களுக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.
பிரதேச செயலகங்கள் ஊடாக இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுமென சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார்.
இதற்கென 419 மில்லியன் ரூபா அமைச்சுக்குக் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாத நிலுவைக் கொடுப்பனவுகளுடன் அந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா குறிப்பிட்டார்.
அனைத்து பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் இது குறித்துத் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
