செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை : 11 மாதங்களுக்குள் நிர்மாண வேலை பூர்த்தி

வவுனியாவில் முதல்முறையாக அமைக்கப்படும் ஆடைத் தொழிற்சாலைக்கான நிர்மாணப்பணிகள் அடுத்த மாதங்களுக்குள் பூர்த்தியடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை இத்தாலியின் ஆடைத்தொழிற்சாலை நிறுவனமொன்று ஆரம்பித்துள்ளது.

ஆடைத்தொழிற்சாலைக்கான அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டது. இதன் நிர்மாணப்பணிகள் அடுத்த 11 மாதங்களுக்குள் நிறைவுசெய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சலை நிர்மாணிக்கப்படுவதன் மூலம் சுமார் 2000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.