திங்கள், 19 செப்டம்பர், 2011

டெல்லி உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை கடும் நிலநடுக்கம், 2 பலி

டெல்லி உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை பலத்த நிலநடுக்கம் இன்று மாலை ஏற்பட்டுள்ளது. மேலும், சிக்கிமில் இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சிக்கிம் மாநிலம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் நில நடுக்கத்தை அடுத்து பிரதமர் தலைமையில் அவசரக்கூட்டம் தற்போது நடைபெறுகிறது. இந்நிலையில், சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் கதைத்துள்ளார். நிலைமையை சமாளிக்க தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

சிக்கிம் மாநிலத்தில் இன்று மாலை 6.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் மாலை 6.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட சில வட மாநிலங்களில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிக்கிமில் ஏற்பட்ட நிலநடுக்கம் மேற்குவங்கம், டெல்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.