வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் விவேகராசா இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 56 ஆகும்.
கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விவேகராசா கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சேவையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
