ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

வரும் மக்களுக்கு விருந்தளிப்பது ஜனாதிபதியின் உன்னத குடும்ப பண்பு .

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகைக்கு சென்ற பின்னரே அலரி மாளிகை பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டது. அங்கு வரும் மக்களுக்கு விருந்துபசாரம் அளிப்பது ஜனாதிபதி அவர்களின் குடும்ப விருந்தோம்பல் பண்பு என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார்.

அலரி மாளிகைக்கு வரும் பொதுமக்களுக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ பொதுமக்களின் பணத்திலிருந்து ஜனாதிபதி அவர்கள் விருந்துபசாரம் அளிக்கவில்லை.எதிர்வரும் வரவு - செலவுத் திட்ட வரைவு தொடர்பாக தினமும் ஜனா திபதி பொது அமைப் புகள் தொழிற்சங்கங்கள்- அமைச்சு அதிகாரிகள் திணைக்களங்கள் போன்றவற்றுடன் பேச்சு நடத்து வதுடன் அவர்களது ஆலோசனைக ளையும் பெற்று வருகிறார்.ர்தல் ஒன்று வருகிறது என் பதற்காக ஜனாதிபதி அவர்கள் தனது எல்லா கடமைகளையும் நிறுத்திவிட முடியுமா?

ஜனாதிபதி அவர்களை சந்திக்க வருபவர்களுக்கு விருந்துபசாரம் செய்வது அவரது பரம்பரை பரம் பரையாக வந்த விருந்தோம்பல் பண்பு என்பதை யாவரும் அறி வார்கள்.ஆனால் இன்று சிலர் இதனை அரசியலாக்கிக் கொள்ள முயன்று வருகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டி னார்.அலரி மாளிகை இன்று விருந்து பசாரம் செய்யும் இடமாக மாறி விட்டது என ஐ. தே. க. செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளி க்கும் வகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார்.