ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேலணை பிரதேச சபையின் முதலாவது கூட்ட அமர்வு நாளை

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேலணை பிரதேச சபை உறுப்பினர்களுக்கான முதலாவது கூட்ட அமர்வு நாளை காலை 10.00 மணிக்கு வேலணை பிரதேச சபையில் நடைபெறவுள்ளது.

இந்த முதல் அமர்வின் கூட்டத்தில் பிரதம விருந்தினராக பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் கௌரவ அதிதிகளாக ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்த்திரி அலன்ரின் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வேலணை வங்காளாவடி முருகன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஊர்வலமாக பிரதேச சபை காரியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு பிரதேச சபையின் வளாகத்தில் பொதுக் கூட்டம் இடம்பெற்ற பின் சபையின் காரியாலயத்தில் சபை நடவடிக்கைக்கான முதல் அமர்வு நடைபெறவுள்ளது.