ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மறுவாழ்வளிக்கப்பட்டு வருபவர்களுள் ஒருகுழுவினரை விடுவிக்கத் திட்டம்

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து மறுவாழ்வளிக்கப்பட்டுவரும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுள் ஒரு குழுவினரை இம்மாத இறுதியில் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீர் திருத்த அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், தற்போது மறுவாழுவளிக்கப்பட்டு வரும் சுமார் 2000 பேர்களில் ஒரு குழுவினரே இவ்வாறு விடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலார் ஏ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மீதமுள்ளவரகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் சுமார் ஒருவருட காலத்துக்கு இன்னமும் மறுவாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்படுவர் என அவர் தெரிவத்துள்ளார்.