தமிழ்நாடு தம்பம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 13 வயதுச் சிறுவன் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் கடத்தலானது குறித்த சிறுவனின் தாயாரால் மேற்கொள்ளப்பட்ட நாடகமென தெரியவந்துள்ளது.
படகின் மூலம் சட்டவிரோதமாக இலங்கை செல்ல முயன்ற சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு மதுரை சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுவனின் தாயார் குறித்த சிறுவனுடன் தனது கணவனை பிணையில் அழைத்துச் செல்ல மதுரைச் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
இதன்பின்பு மதுரையிலிருந்து தான் அகதிகள் முகாமுக்கு தனியே திருப்பிய தனது மகன் காணமல் போயுள்ளதாக சிறுவனின் தாயார் தம்பம்பட்டி பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
பின்பு தனக்கு இனம்தெரியாதவர்கள் தொலைத் தொடர்பினை மேற்கொண்டு 2 லட்சம் பணம் கொடுத்தால் மகனை விடுவிப்பதாக கூறியதாக தயார் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மீண்டும் தான் தம்பம்பட்டி முகாமிற்கு வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் வீட்டிற்கு வந்து பணம் கோரியதாக தாயார் அயல் வீட்டவர்களிடம் கூறியுள்ளார்.
ஆனாலும் கடத்தல்காரர்கள் வீட்டிற்கு வந்த பணம் கோரினர் என்பதனை பொலிஸார் நம்பவில்லை. அதன்பின்பு அன்றைய தினம் வந்த நால்வர் காரூர் அகதி முகாமைச் சேர்ந்த விக்னேஷ்வரன், ராஜரட்ணம், ஜெயராஜ் மற்றும் அசோக் என பொலிஸார் இனம்கண்டு கொண்டனர்.
இந்நிலையில் தனது மகன் நச்சிகன்பட்டி பஸ் நிலையத்தில கண்களை கட்டிய நிலையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்டதாக பொலிஸாரிடம் தாயார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுவனை பொலிஸார் விசாரணை செய்தபோது தாயாரே தன்னை தலை மறைவாக இருக்க சொன்னதாக தெரிவித்துள்ளான். மேலும் தாயாரிடம் விசாரணை செய்த போது கடனாளிகளிடம் சிறிதுகாலம் தப்பிப்பதற்காகவே இவ்வாறு ஒரு நாடகத்தை அரங்கேற்றியதாக தெரிவித்துள்ளார்.
