வியாழன், 22 செப்டம்பர், 2011

மற்றுமொரு வேட்டைத் திருவிழா தடுத்து நிறுத்தப்பட்டது

உடப்பு ஆராச்சிகட்டு காளி அம்மன் கோவிலில் நாளைய தினம் நடைபெறவுள்ள வேட்டைத் திருவிழாவை இடைநிறுத்துமாறு புத்தளம மேலதிக மாவட்ட நீதவான் ஐ.பீ.இளங்கசிங்க உத்தரவிட்டுள்ளார்.

முத்தலம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையை கருத்தில் கொண்டே இவ்வாறான உத்தரவை மேலதிக மாவட்ட நீதவான் பிறப்பித்துள்ளார்.

பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையில் நாளைய தினம் இந்த நிகழ்வு நடைபெற்றால் பொதுமக்கள் மத்தியில் கைகலப்பு எற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.