வியாழன், 22 செப்டம்பர், 2011

ஆமர்வீதியில் நேற்றுமாலை முச்சக்கர வண்டி திருடர்கள் கைது

ஆமர்வீதியில் நேற்றுமாலை முச்சக்கர வண்டியொன்றினை திருடிக் கொண்டிருந்த இருவரை அவசரப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவசரப்பிரிவு பொலிஸாருக்கு நேற்றுமாலை கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர் இருவரையும் கைது செய்து கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெலிமடை மற்றும் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களை இன்று மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.