அத்தனகல நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் ஹெரோயின் போதைப் பொருளுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் கடமையில் இருந்த பொலிஸாரால் குறித்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 6 கிரேம் 400 மில்லிகிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள தனது மகன் நீதிமன்றிற்கு அழைத்து வரப்படவிருந்த நிலையில் மகனுக்கு வழங்கவென குறித்த ஹெரோயினை தாய் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று அத்தனகல நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெதரிவித்தனர்.
