வியாழன், 22 செப்டம்பர், 2011

உயர் கல்வியினை தனியார் மருத்து கல்லூரி: மருத்துவ பீட மாணவர்கள் எதிர்ப்பு

உயர் கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருவதாக இலங்கை மருத்துபீட மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நேற்றைய தினம் மாணவர் குழுவினர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

அரசின் திட்டத்துக்கு மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவக் கல்வி தனியார் மயப்படுத்துவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இலங்கையில் முற்று முழுதாக கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கொழும்பு மருத்துவ மாணவர்கள் சங்கத் தலைவர் நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாவதற்கு அண்மித்து தவறியவர்களுக்கு மட்டும் வாய்ப்பினை வழங்காது ஆறரை மில்லியன் ரூபாவுக்கு கதவினை திறந்து விட்டுள்ளது.

இந்நிலையில் கல்வியினை தனியார்மயப்படுத்தினால் நாட்டின் இலவசக் கல்விக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என மாணவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரியை மாலேபேயில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ரஷ்ய நிஸ்னி நொவ்கிராட் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கவுள்ளது. இதற்கு முதலீட்டு சபையும் அனுமதி வழங்கியுள்ளது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.