செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் பதவி விலகினார்

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் தனது பதவியிலிருந்து திடீர் இராஜினாமா செய்துள்ளதாக மாலைத்தீவு இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகளுடன் இணைந்து சில பொலிஸாரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாலைத்தீவு ஜனாதிபதி இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தான் பதவி விலகி அந்த இடத்திற்கு தற்போதை துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் என்பவரை நியமிக்க மாலைத்தீவு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக மாலைத்தீவு இராணுவ பிரிகேடியர் அஹமட் சியாம் தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவின் மூத்த நீதிபதி ஒருவரை கைது செய்துமாறு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் மொஹமட் நசீட் விடுத்த உத்தரவை அடுத்தே அங்கு எதிர்கட்சிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்பாட்டக்கார்கள் மீது இராணுவத்தினர் மாலைத்தீவு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஆர்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைக் குண்டு, இறப்பர் குண்டு ஆகியவற்றை பிரயோகித்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதும் மாலைத்தீவு ஜனாதிபதி அலுவலகம் அதனை மறுத்துள்ளது.