வத்தளை - எவரிவத்தை பகுதியில் திருமணமான வயது முதிர்ந்த ஜோடி ஒன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (06) மாலை 06.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
62 வயதுடைய ஜோடியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மரண விசாரணை இன்னும் நிறைவடையவில்லை.
சம்பவம் குறித்து வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
