இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காந்திநகர் கடல் பகுதியிலிருந்து, இலங்கைக்கு கடத்த முயன்ற, 35 செம்மரக் கட்டைகளுடன், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக, தமிழக கடல் வழியாக, இலங்கைக்கு கடத்தல்கள் குறைந்திருந்தன.
இந்திய கப்பற்படை, கடலோர காவல்படை, விமானப் படை, சுங்கத் துறையினர், மன்னார் கடல் பகுதியில், தற்போது தீவிர ரோந்து மேற்கொள்வதில்லை. இதனால் இலங்கைக்கு, மீண்டும் கடத்தல் துவங்கி உள்ளது.
மண்டபத்தில் கியூ பிரிவு பொலிஸார், சமீபத்தில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர், மண்டபம் மீனவர் காலனியில் பதுங்கினர்.
அவர்களை பிடித்து விசாரித்தபோது, இலங்கைக்கு கடத்துவதற்காக, 35 செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. மரக்கட்டைகளுடன் மூவரையும், கியூ பிரிவு பொலிஸார், சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
