அலுத்கடை நீதிமன்ற கட்டட வளாகத்தில் இருந்து இரு கைக்குண்டுகளும் வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து 7 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
பொது மக்களிடம் இருத்து கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைக்குண்டுகள் மீட்கப்பட்டதை அடுத்து அலுத்கடை நீதிமன்ற கட்டட வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வெள்ளை கொடி வழக்கின் தீர்ப்பு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு நாளை (08) பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தலைமையில் 4 பேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
