வவுனியா மெனிக் பாக் முகாமிலிருந்த 207 குடும்பங்கள், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்றப்பட்டுள்ளன.
இம்மீள்குடியேற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரகோன், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மக்களுக்கு உலருணவுப பொருட்கள், நீர்ப்பம்பி, தென்னங்கன்று மற்றும் விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இம்மக்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் எனவும் அப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதால் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கோம்பாவில் பகுதியில் தற்காலிகாமக மீள்குடியேற்றப்படுவதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
