செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

கனடா சென்ற சிலருக்கே அகதி அந்தஸ்த்து - ஏனையோர் கதி?

கனடாவிற்குள் நுழையவென சுமார் 600 இலங்கையர்கள் அட்கடத்தல் காரர்களுக்கு பணம் வழங்கியுள்ளதாக கனேடிய குடிவரவு சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களை மெதுவாகவும் வெற்றிகரமாகவும் கனடாவிற்குள் கொண்டு சேர்க்க இவர்கள் இவ்வாறு பணம் வழங்கியுள்ளனர்.

76 இலங்கை அகதிகளை ஏற்றிய ஓசன் லேடி கப்பல் சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின் வென்கவர் தீவைச் சென்றடைந்தது.

அந்த கப்பலில் சென்று அகதி அந்தஸ்த்து கோரிய 76 பேரில் ஒருவருக்கு மாத்திரமே அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய சிலரை நாடு கடத்தப்படவுள்ளதாகவும் சிலரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கனேடிய குடிவரவு சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் 2010ம் ஆண்டு எம்வி சன் சீ கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த 492 இலங்கை அகதிகளில் 3 பேருக்கு மாத்திரமே அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.

13 பேரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு, ஐவர் கைவிடப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் குறித்து அடுத்த மாதம் நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய குடிவரவு சபை குறிப்பிட்டுள்ளது.