கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயிலை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்ட 6 சந்தேகநபர்கள் தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்வையிடச் செல்வோரை ஏற்றிச் சென்ற விசேட ரயில் மீதே தலாவ பகுதியில் வைத்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ரயிலில் பயணித்த ஆறு பேர், ரயிலை விட்டு இறங்கி கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் அறுவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
