மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டு மன்னார்
பொலிஸாரினாலும்,புலனாய்வுத்துறையினராலும் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் 11 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரால் மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு பொதுச் சொத்துகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அரச திணைக்களப் பணியாளர்கள்,பொலிஸ் கான்ஸ்;டபிள் ,பொது மக்கள் என 19 பேர் இது வரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரை மன்னார் பொலிஸார் தேடி வந்தனர்.