திங்கள், 10 செப்டம்பர், 2012

இலங்கை ஜனாதிபதி வருகையை தமிழகமக்கள் எதிர்க்கவில்லை

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு வருவதை தமிழக மக்கள் எதிர்க்கவில்லை, ஒரு சில அரசியல் கட்சியினர் மட்டுமே எதிர்க்கின்றனர் என முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய பொதுக் கணக்கு குழுத் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-​
இலங்கை ஜனாதிபதி மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு வருவதை அந்த மாநில மக்களோ, தமிழக மக்களோ எதிர்க்கவில்லை. தமிழகத்திலுள்ள சில கட்சிகள்தான் எதிர்க்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

(தினபூமி)