திங்கள், 10 செப்டம்பர், 2012

பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 58வது மாநாட்டின் ஆரம் பக்கூட்டத்தொடர் நாளை!

பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 58வது வருடாந்த மாநாட்டின் ஆரம்பக்கூட்டத்தொடர்  இன்று கொழும்பிலுள்ள தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும்  இம்மாநாட்டுக்கூட்டத்தொடரில் 54 நாடுகளைச் சேர்ந்த 850 பேராளர்கள் பங்குபற்றுகின்றனர்.

‘எதிர் காலத்துக்கு பொருத்தமான பொதுநலவாய அமைப்பை உறுதிப்படுத்துதல்’ என்பதே மாநாட்டின் தொனிப் பொருளாகும்.  ‘சுகாதாரம் கல்வி தொழில் பயிற்சி ஆகியவற்றுக்கு எதிர்கால தலைமுறையினரை வலுவூட்டுதல்’ என்ற தலைப்பில் செயலமர்வு நடைபெறும்.

பல்வேறு தலைப்புக்களில் கருத்துப் பரிமாறல்களில் பேராளர்கள் பங்குகொள்வர்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான ஆலோசனைக் குழுவும் பிரதிச் சபாநாயகர் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவும் மாநாட்டுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளன.

செப்டம்பர் 15ஆம் திகதி வரை இம்மாநாடு நடைபெறும்.