வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தியிருந்தால் தற்போது நடைமுறை ரீதியாக சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருக்க முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
யாழ்ப்பாணம், வறணியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும், இலங்கை – இந்திய ஒப்பந்தததின் ஊடாக கிடைத்த மாகாணசபை அதிகாரங்கள் என்பது பொன்னான வாய்ப்பு என்று தெரித்த அமைச்சர், அது தவறானவர்களின் கைகளில் சென்றடைந்தமையினால் சரியாக கையாளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.


















