வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஜேம்ஸ் எழுதிய கடிதத்தில் எதுவித உண்மையும் கிடையாது

ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வொஷின்டன் பேஸ்ட் பத்திரிகையில் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஜேம்ஸ் மெக்டொனால்ட் எழுதிய கடிதத்தில் கனடா சென்றுள்ள இலங்கை அகதிகள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார். அதில் கனடா சென்றுள்ள இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குமாறு கோரியிருந்தார்.

மேலும், கனடா சென்றுள்ள இலங்கையர்கள் மீண்டும் தமது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் அங்கு துன்பங்களை அனுபவிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜேம்ஸ் மெக்டொனால்ட் எழுதிய கடிதத்தில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் உண்மைக்கு புறம்பான தகவல்களையே அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.