வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டையில் இரு இந்தியத் துணைத் தூதரகம்

யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டையில் இரு இந்திய துணைத் தூதரகம் திறப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று, இலங்கை வெளிவிவகாரச் செயலாளர் சி.ஆர்.ஜெயசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா ஆகியோருக்கிடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.

வெகுவிரைவில் இரு இடங்களுக்கும் உரிய துணைத் தூதரகம் திறக்கப்படுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் உறுதிப்படுத்தியுள்ளது.