வியாழன், 16 செப்டம்பர், 2010

கடந்த மே மாதம் முதல் இது வரையான காலப்பகுதியில் சிறுவர் போராளிகள் 667 பேர் விடுதலை

கடந்த மே மாதம் முதல் இது வரையான காலப்பகுதியில் முன்னாள் சிறுவர் போராளிகள் 667 பேர் புனர்வாழ்வு வழங்கப்பட்ட பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 15 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமானது.இதில் அரசின் சார்பில் மொஹான் பீரிஸும் கலந்துகொண்டார்.

இவர் அங்கு ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரங்களுக்கு பொறுப்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமியை சந்தித்துப் பேசினார்.

அப்போதே மொஹான் பீரிஸ் இத்தகவலை ராதிகா குமாரசாமிக்கு வழங்கினார். விடுதலை செய்யப்பட்டவர்களில் 316 பேர் ஆண்கள் என்றும் 351 பேர் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.