சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
புதிய தரவரிசையில் 130 புள்ளிகளைப் பெற்று அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 118 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
