57 ஆவது பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை நாடு திரும்புகிறார்.
எதிர்வரும் 3ம் திகதி நாடு திரும்புவது என திட்டமிட்டு, பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை நாடு திரும்பவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்கட்சி தலைவர் திடீரென நாடு திரும்பக் காரணம் கட்சியுள் காணப்படும் தலைமைத்துவ பிரச்சினைகளே என நம்பத்தகு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
