திங்கள், 26 செப்டம்பர், 2011

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 1200 கணினிகள்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 1,200 கணினிகளை இந்தியா வழங்கியுள்ளது என இந்திய தூதர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:-

இதற்கான நிகழ்ச்சி திருகோணமலையில் நடைபெற்றது, 1200 கணினிகளும், 160 லேசர் பிரிண்டர்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் திறனை அதிகரிக்க உதவும் வகையில் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

திருகோணமலை - மட்டக்களப்பு பகுதிகளுக்கு இடையே ரயில், சாலை வசதிகளை மேம்படுத்த இந்தியா உதவி செய்துள்ளது. இலங்கை போக்குவரத்துக் சபைக்கு 20 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்க 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது