ஏறக்குறைய 60 வீதமான இலங்கையின் உற்பத்திப் பண்டங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுக ளுக்கே ஏற்றுமதி செய்யப்படுவதாக கொள்கை கற்கை நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும் சிந்தனையாளருமான அனுஷ்கா விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது உலகப் பொருளாதார ஈர்ப்பு மையமாக இப்போது கிழக்கு நாடுகளே விளங்கி வருகின்றன. இது ஆசிய நூற்றாண்டு ஆகும். மேற்கத்தேய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பொருளாதாரம் காலம் கடந்தாகிவிட்டது. எனினும் அமெரிக்கர்களுக்கு இயற்கையாக அமையப் பெற்றுள்ள சக்திகளைக் கொண்டு புதிய இளைஞர் சிரமப்படையொன்றை உருவாக்கிக் கொள்ள சாத்தியமுள்ளதாகையால் அவர்களுடைய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு விட்டதெனத் தீர்மானிப்பதற்கு இன்னும் காலமிருக்கிறது.
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இலங்கை உற்பத்திகள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி உற்பத்திகள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ள அனுஷ்கா விஜயசிங்க இலங்கையின் இன முறுகல் தொடர்பிலான மனித உரிமைத் துஷ்பிரயோகங்கள் அந்நாடுகளுடனான பொருளாதார உறவுகளைப் பாதித்துவிடக் கூடாதெனவும் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் முப்பதாண்டு கால யுத்தம் 2009 இல் முடிவுற்ற போதும் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என மேற்கத்தேய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
மேற்படி காரணங்களால் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பொருட்களுக்குதீர்வைவிலக்களிக்குமஜி.எஸ்.பி.பிளஸ்,வர்த்தகச்சலுகை யை வழங்க ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே மறுத்துள்ளது. உதவி, முதலீடு மற்றும் அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கை ஏற்கனவே சீனா , ரஷ்யா, ஈரான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை நாடியுள்ளது. இந்தியாவு டனான பொருளாதார உறவுகள் நெருக்க மடைய வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
