எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தல்களுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று விடுமுறை தினமாக இருந்த பொழுதிலும், வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்கள் தமது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
