வியாழன், 15 செப்டம்பர், 2011

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் ஐ.நா நடந்து கொண்டவிதம் – மீளாய்வு

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்வதற்கான அதிகாரி ஒருவரை ஜ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ளார்.

ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா ஓபெய்ட் என்ற அதிகாரியே இதற்கென நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. செயலகம் அறிவித்துள்ளது.

பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையின் யுத்தத்தில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக ஐ.நா. வெளியேறியமையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் யுத்தத்தின் போது ஐ.நா. நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்யப்படவேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்திருந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு முன்னகர்த்திய கையோடு இந்த நியமனத்தையும் பான் கீ மூன் வழங்கி உள்ளார். ஓபெய்ட் தனது பணிகளை விரைவில் ஆரம்பிப்பார் என்று ஐ.நா. அறிவித்தள்ளது.