ஐ.நா நிபுணர் குழு தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே எனவும் அது எந்தவித விசாரணைகளையும் மேற்கொள்ளாது எனவும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் 2010ம் ஆண்டு சந்தித்த போது வழங்கிய உறுதி மொழியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் நியாபகப்படுத்தியுள்ளார்.
ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
சந்திப்பின் போது யுத்தின் பின் வடக்கில் உட்கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்தி தொடர்பிலும் இடம்பெயர்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு விளக்கமளித்துள்ளார்.
அத்தோடு அரசு இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான ஒரு கட்டமாக தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் நனாதிபதி தெரிவித்துள்ளார். இதன்போது பான் கீ மூன் தனது திருப்தியினை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தின் போது நேர்ந்த மனித உரிமை மீறல்கள் எனக் கூறி வெளியிடப்பட்ட ஐ.நா நிபுணர் குழு அறிக்கையானை இலங்கைக்கு தெரிவிக்காமல் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் உயர்ஸ்தானிகர் நவிப்பிள்ளைக்கு சமர்பிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளின் போது நெறிமுறையற்ற செயற்பாடானது அதிருப்தியை ஏற்படுத்துவதோடு ஐ.நா மீது கொண்டுள்ள நம்பகத் தன்மையை குறைக்கின்றது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் குறிப்பிட்டுள்ளார்.
